அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 28ம் தேதி நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 4 ஆண்டுகளாக 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகின்றன.
இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய தேர்வுக்கான பணிகளை செய்ய உரிய வழிகாட்டுதல் இல்லாமல் 900 உயர்நிலைப் பள்ளிகள் திணறி வருகின்றன. இந்நிலையில் சீனியாரிட்டி குறித்த பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தலைமை ஆசிரியர் பணி நியமன கவுன்சலிங் நடக்கும். இதில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டிபடி வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment