
மதுரை;மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான கணினிகள் மற்றும் மையங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஏழாவது சம்பளக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்த 'ஜாக்டோ ஜியோ' சார்பில் செப்.,7 முதல் 15 வரை வேலை நிறுத்த போராட்டங்கள் நடந்தன. உயர்நீதிமன்றம் தலையீட்டால் போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், 'வேலை நிறுத்த காலத்தை ஈடுகட்ட சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் டிச.,27 முதல் 30 வரை நடக்கும் கணினி பயிற்சியில் (ஐ.சி.டி.,) பங்கேற்க வேண்டும்,'' என உத்தரவிட்டார். 'அரையாண்டு தேர்வு விடுமுறை காலத்தில் பயிற்சி நடத்த வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்களை பழிவாங்கும் செயல்,' என, சர்ச்சை எழுந்தது.இந்நிலையில், மாவட்டத்தில் இன்று முதல் (டிச., 27) 11 மையங்களில் இதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 976 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். பெரும்பாலான அரசு பள்ளி மையங்களில் கணினிகள் இல்லாத நிலையில் பயிற்சிக்கு பயன்படுத்த கணினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சொந்தமாக 'லேப்டாப்' கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது: 'போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், போராட்ட காலத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் நலன் கருதி அதை ஈடுசெய்ய பணி செய்ய வேண்டும்,' என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
No comments:
Post a Comment